தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கு அமலில் இருகிறது - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கரோனா அதிகரிப்பால், ஊரடங்கு அமலில் இருக்கிறது என்றும்; இதனால் மக்கள் அனைவரும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

ஊரடங்கு அமலில்  இருகிறது
ஊரடங்கு அமலில் இருகிறது

By

Published : Mar 19, 2021, 9:39 PM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது.

நேற்று(மார்ச் 18) வியாழக்கிழமை மகாராஷ்டிராவில் 25,833 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த 2020 செப்டம்பரில் ஒரே நாளில் 24,886 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் மகாராஷ்டிராவில் நேற்றைய பாதிப்பே அதிகம். நேற்று மட்டும் அங்கு 58 பேர் பலியாகினர்.

இதுகுறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில், 'கரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

மாநிலத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதற்காக உத்தவ் தாக்கரே, மேலும் தடுப்பூசி மையங்களைத் தொடங்க மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளது.

மேலும், கரோனா தடுப்பூசியைத் தயாரிக்க மும்பையைச் சேர்ந்த ஹாஃப்கைன் நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் கட்டாயமாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். பல மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்' என்று பேசினார்.

இதையும் படிங்க : காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் பரப்பரை

ABOUT THE AUTHOR

...view details