தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆயில் மில்லுக்கு வந்த டேங்கர் லாரியில் 4 டன் பாமாயில் திருட்டு - போலீஸ் விசாரணை - Theft of 4 tons of palm oil

புதுச்சேரி ஆயில் மில்லுக்கு வந்த டேங்கர் லாரியில் இருந்த நான்கு டன் பாமாயிலை திருடி, தண்ணீரை கலந்து மோசடி செய்த லாரி ஓட்டுநர், கிளீனர் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

4 டன்  பாமாயில் திருட்டு
4 டன் பாமாயில் திருட்டு

By

Published : Aug 18, 2021, 6:25 PM IST

புதுச்சேரி: வில்லியனூர் மணவெளி பகுதியில் ஐஸ்வரியம் என்ற பெயரில் தனியார் ஆயில் மில் இயங்கி வருகிறது. இந்த ஆயில் மில், சென்னை முகப்பேரில் ஏஜெண்டாக செயல்பட்டு வரும் ஓர் நிறுவனத்திடம், பாமாயில் எண்ணெய் வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தது.

கேட்பாரற்று நின்றிருந்த லாரி

அதன்பேரில் அந்த நிறுவனம், ஐதராபாத்திலுள்ள பாமாயில் தொழிற்சாலையில் 40 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு 29.96 மெட்ரிக் டன் சமையல் எண்ணெயை கொள்முதல் செய்து சென்னையிலுள்ள லாரி டிரான்ஸ் போட்டுக்கு சொந்தமான டேங்கர் லாரி மூலம் கடந்த ஜூலை 24ஆம் தேதி புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தது.

இந்த லாரியை ஓட்டுநர் கருப்பசாமி என்பவர் ஒட்டி வந்துள்ளார். இதில் கிளீனராக பாலசுப்பிரமணியன் இருந்தார். ஜூலை 27ஆம் தேதி புதுச்சேரிக்கு அந்த லாரி வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நாளில் லாரி வராததால், இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த ஆயில் மில் நிர்வாகம் சென்னையிலுள்ள நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டது.

பின்னர் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் விசாரித்தபோது, சென்னை மாதவரம் பகுதியில் குறிப்பிட்ட டேங்கர் லாரி கேட்பாரற்று நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று ஓட்டுநர் மூலம் அந்த லாரி புதுச்சேரி ஆயில் மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நான்கு டன் எண்ணெய் திருட்டு

அப்போது அங்கு லாரியிலுள்ள எண்ணெயை சோதனை செய்தபோது, அதில் தண்ணீர் கலந்திருப்பதும், நான்கு டன் எண்ணெய் திருடப்பட்டு, அதற்கு பதிலாக தண்ணீரை கலந்து திருட்டை மறைக்க மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால், லாரியிலுள்ள 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பயன்படுத்த முடியாமல் வீணானது.

இந்த மோசடி குறித்து சென்னை நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர் கேசவய்யா புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஓட்டுநர் கருப்பசாமி, கிளீனர் பாலசுப்ரமணியன், லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் பிரபு தலைமையிலான காவல் துறையினர், தலைமறைவான ஓட்டுநர், கிளினீரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details