தெலங்கானா:சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வேண்டுமென்பதற்காக சிலர் செய்யும் செயல்கள் வேடிக்கையாகவும், முட்டாள்தனமாகவும், நகைப்புக்குள்ளாக்குவதாகவும் இருந்து வருவது தற்போதைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
அதே சம்யம் இந்த பிரபலமலமடைவதற்காக உயிரையும் பணைய வைத்து சிலர் செய்யும் செயல்களை நாம் காண்பதும் அவ்வப்போது நடக்கத் தான் செய்கிறது. லைக்ஸ்களுக்காகவும், வியூஸ்களுக்காகவும் இப்படி உயிருக்கே ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவது குறைந்த பாடில்லை.
அப்படி ஓர் சம்பவம் தான் தெலங்கனாவில் உள்ள ஹனுமகொண்டா மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது. வடேப்பல்லியைச் சேர்ந்த அஜய் எனும் இளைஞர் ரயில்வே டிராக்கிற்கு தனது மூன்று நண்பர்களுடன் இன்று (செப்.4) ரீல்ஸ் எடுக்கச் சென்றார்.
அப்போது, ரயில் வரும்போது, தான் அதன் முன் நடந்து வருவதாய் ரீல்ஸ் எடுக்க முயலும் போது, காஜிபேட்டிலிருந்து பல்லர்ஷா சென்றுகொண்டிருந்த ரயில் மோதி படுகாயமடைந்தார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அவரை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: யார் இந்த சைரஸ் மிஸ்திரி..? - சில குறிப்புகள்