தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறுதிகட்டப்பணியில் உலகின் மிக உயரமான செனாப் நதி பாலம்! - இறுதிக்கட்ட பணியில் உலகின் மிக உயரமான செனாப் நதி பாலம்

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், செனாப் ஆற்றின் மீது உலகின் மிக உயரமான ஒற்றை வளைவு ரயில் பாலத்தின் இறுதிகட்டப்பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பணியில் உலகின் மிக உயரமான செனாப் நதி பாலம்
இறுதிக்கட்ட பணியில் உலகின் மிக உயரமான செனாப் நதி பாலம்

By

Published : Aug 5, 2022, 10:08 PM IST

ஸ்ரீநகர்: செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுவரும் உலகின் மிக உயரமான ரயில் பாலம் இந்தியன் ரயில்வேயின் ஒரு மைல்கல் ஆகும். ஜம்மு யூனியன் பிரதேசத்தில் கட்டப்பட்டுவரும் இந்தப்பாலத்தின் இரு பகுதிகளையும் இணைக்கும் இறுதிகட்டப்பணிகளை ஒரு வாரத்திற்குள் முடிக்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக இன்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

1.315 கி.மீ., நீளமுள்ள பாலம் இந்தப்பாலம் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டு வருகிறது. முழு ஈபிள் கோபுரத்தின் உயரத்தைவிட 35 மீட்டர் உயரம் ஆகும். இந்தப்பாலம் சலால்-ஏ மற்றும் துக்கா ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் செனாப் நதியின் மேல் கட்டப்படுகிறது.

இறுதிகட்டப் பணியில் உலகின் மிக உயரமான செனாப் நதி பாலம்

பாலத்தின் இருபகுதிகளும் HSFG - எனப்படும் வலிமையான போல்ட்களின் உதவியுடன் இணைக்கப்பட்டு கட்டுமானம் முடிவடையும். ஆற்றின் மேல் 359 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் இந்தப்பாலம் ஒரு அசாதாரண சாதனை என்றும் ஜம்மு & காஷ்மீர் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்றும் கட்டுமான நிறுவனமான அஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் கிரிதர் ராஜகோபாலன் மும்பையில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

செனாப் நதி பாலம் குறித்து மேலும் அவர் கூறியதாவது, 'இந்தப்பாலம் 85 டன் எடையுடைய 93 தளப்பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்தப்பகுதிகள் பள்ளத்தாக்கின் இரு முனைகளிலிருந்தும் பிரமாண்ட இரும்பு வளைவின் மீது ஒரே நேரத்தில் எடுத்துவரப்பட்டு இணைக்கப்பட்டது.

இறுதிகட்டப் பணியில் உலகின் மிக உயரமான செனாப் நதி பாலம்

இந்தப்பாலம் உதம்பூரிலிருந்து பாரமுல்லா வரையிலான 272 கி.மீ நீளமுள்ள ரயில் பாதை திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த ரயில்பாதை திட்டம் காஷ்மீர் பள்ளத்தாக்குடன் ஜம்முவை இணைக்கிறது. இந்தத் திட்டத்திற்கு 'உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத்திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் கட்டுமானத்திற்கு இதுவரை சுமார் 30,350 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரமாண்டமான வளைவைக்கட்ட 10,620 டன்களும், பாலத்தின் தளத்திற்கு 14,500 டன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாலம் சலால் அணையின் மேல்புறத்தில் உள்ள கவுரி கிராமத்திற்கு அருகில் கம்பீரமாக நிற்கிறது’’ என்றார்.

கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள உயர் தொழில்நுட்பத்தைப் பற்றி ராஜகோபாலன், ''இந்திய ரயில்வேயில் முதன்முறையாக, இத்தகைய பிரமாண்ட வளைவின் மீது நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. பொதுவாக பாலங்கள் நேராக அல்லது ஒரே மாதிரியான (ஆர்ச்) வளைவுகளைக்கொண்ட அமைப்புகளாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்தப்பாலத்தில் இரண்டு வகைகளையும் இணைத்து பிரமாண்ட வளைவின் மீது நீளமான பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புயல் காற்றுடன், கடினமான பருவநிலைகளையும் தாங்கிக்கொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைந்தது. இந்தப்பாலத்தின் வடிவமைப்பை இறுதி செய்வதில் வடக்கு ரயில்வே மற்றும் கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் பெரும் பங்கு வகித்தன.

தீவிரமான வானிலை, பள்ளத்தாக்கில் அடிக்கடி வீசும் பலத்த சூறாவளி போன்றவைகளை பாலத்தின் இருபுறமும் நிறுவப்பட்ட அதிநவீன தானியங்கி சமிக்ஞை அமைப்பு கண்டறியும். காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ., வேகத்தைத் தொட்டால் பாலத்தைக்கடக்காமல் ரயில்கள் நிறுத்தப்படும். தரம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, அனைத்து நிலைகளிலும் தரத்தைக் கண்காணிக்க அஃப்கான்ஸ் தளத்தில் தேசிய அங்கீகாரம் பெற்ற ஆய்வகம் அமைக்கப்பட்டது. வெல்ட் மாதிரி பரிசோதனைகள் போன்றவை, அதிக நேரத்தை மிச்சப்படுத்துகின்றன. நாட்டில் முதல்முறையாக வெல்ட்களை ஆய்வு செய்ய ஒரு கட்ட வரிசை ’மீயொலி சோதனை இயந்திரத்தைப் பயன்படுத்த’ வடக்கு ரயில்வே அனுமதித்தது.

பாலத்தின் கட்டமைப்பிற்குத்தேவையான அதிக எடை கொண்ட பெரிய பொருட்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ட்ரெய்லர்களைக்கொண்ட லாரிகளைப்பயன்படுத்தி சாலைகள் மூலமாக கொண்டு வரப்பட்டது’ என்று அவர் தெரிவித்தார்.

அஃப்கான்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் குழு சுமார் 39 மீட்டர் உயரத்திற்கு 120 டன்களை தூக்கக்கூடிய ஒரு ஏவுதள தளத்தை வடிவமைத்தது. மேலும் கடினமான சோதனைகளை தரக்கூடிய மலை நிலப்பரப்பின் பல்வேறு சவால்களை சமாளிக்க பல புதுமைகளை உருவாக்கி செயல்படுத்தியது.

272 கி.மீ., நீளமுள்ள ரயில் பாதையில் மொத்தம் 119-கி.மீ. நீளம் கொண்ட 38 சுரங்கங்களைக்கொண்டது. நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதையான T-49 12.75 கி.மீ., நீளம் உடையது. மேலும் இந்த வழிதடத்தில் 13 கி.மீ., மொத்த நீளம் கொண்ட 927 பெரிய மற்றும் சிறிய பாலங்கள் உள்ளன. இது ஜம்மு & காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான சகாப்தம் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இந்திய ரயில்வேயின் மற்றொரு மைல்கல்; செனாப் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவு!

ABOUT THE AUTHOR

...view details