பெங்களூரு:கர்நாடக மாநிலம் தாவனகேரே மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜீக், மிகவும் ஏழ்மை சூழலில் உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர். 6 பேர்கள் கொண்ட குடும்பத்தை, தந்தை ஒருவரே கவனித்துக்கொள்ள சிரமப்படுவதைக் கண்ட ராஜீக், மோட்டார் வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற ஆரம்பித்தார்.
இவ்வளவு கடினமான சூழலிலும் படிப்பை விடாத ராஜீக், தொடர்ந்து கல்லூரி படிப்பை படித்து வந்தார். இவர் தனது பட்டப்படிப்பான எம்.ஏ.ஆங்கிலத்தில் முதல் இடத்தைப் பிடித்தார். மேலும், இரண்டு தங்க மெடல்களும் வாங்கியுள்ளார்.
குக்கிராமத்தில் வசிக்கும் ராஜீக், தனது குடும்பத்தை சமாளிக்க வாரத்தில் மூன்று நாள்கள் கல்லூரிக்கும், மீதமுள்ள நாள்களில் தன் தந்தையுடன் மோட்டார் வேலைக்கும் சென்று விடுவார். அவர் படித்த தாவனகேரே பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை, இவரது பட்டப்படிப்பிற்கு உதவியுள்ளது.