கேரளா:மூணாறு அருகே உள்ள ராஜமலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அங்குள்ள மாட்டுத்தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 10 மாடுகளை புலி தாக்கிக்கொன்றது. இதனால் பொதுமக்கள் தேயிலைத்தோட்டத்திற்கு பணிக்குச்செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவானது.
இதனையடுத்து வனத்துறையினர் புலியை மயக்க மருந்து அடங்கிய ஊசியைக்கொண்டு சுட்டுப்பிடிப்பதற்கு ஏற்பாடுகளை ஒரு புறம் செய்தனர். மறுபுறம் மாட்டுதொழுவத்தைச்சுற்றிலும் கூண்டுகள் அமைத்தனர். இந்நிலையில், நேற்று(அக்.4) இரவு மீண்டும் மாட்டுதொழுவத்திற்கு வந்த புலி அந்தப் பகுதியாக வந்த ஜீப் ஓட்டுநரை கண்டு மீண்டும் காட்டுக்குள் சென்றது.
இந்தக் காட்சிகள் வைரலாகப் பரவிய நிலையில் புலியைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு வியூகங்களை வகுத்து பல இடங்களில் கூண்டுகளை அமைத்திருந்தனர். இந்நிலையில், இன்று(அக்.5) அதிகாலை மீண்டும் மாட்டு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளை குறிவைத்து புலி வந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி சிக்கியது.
இரண்டு நாட்களாக கிராம மக்களை அச்சுறுத்திய புலி ; பொறி வைத்துப் பிடித்த வனத்துறை புலியைப் பிடிப்பதற்காக அங்கு முகாமிட்டிருந்த வனத்துறையினர், உடனடியாக புலி அடைக்கப்பட்டு இருக்கும் கூண்டு பகுதிக்குச்சென்று கூண்டை மூடி, அதனை அங்கிருந்து தேக்கடியில் உள்ள பெரியாறு புலிகள் வன சரணாலயப் பகுதிக்கு கொண்டு சென்றனர். கடந்த மூன்று நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி பிடிபட்டது ராஜமலைப் பகுதி மக்களிடையே நிம்மதியினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கர்ப்பமான 14 வயது சிறுமி உட்பட கடத்தப்பட்ட 13 சிறுமிகள் மீட்பு!