தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொடர் விபத்துகளை அடுத்து, பெங்களூருவில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம் - The three storey building

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பழைய குடியிருப்புகள் இடிந்து விழுந்ததையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சேதமடைந்த கட்டடங்களைக் கண்டறிந்து, இடிக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

பெங்களூரு
பெங்களூரு

By

Published : Oct 13, 2021, 3:19 PM IST

Updated : Oct 13, 2021, 5:48 PM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 10 நாட்கள் இடைவெளியில், மூன்று குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

இந்தச் சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக, அங்கிருந்த மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால், இந்த விபத்துகளில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

30 நிமிடங்களில் இடிப்பு

இந்த சம்பவங்களையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சேதமடைந்த கட்டடங்களைக் கண்டறியும் பணியைத் தொடங்கியது. அந்தவகையில் இன்று (அக்.13) காலை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, மூன்று மாடி குடியிருப்புக் கட்டடத்தை அடையாளம் கண்டு, முறையாக அதில் வசிப்பவர்களை நோட்டீஸ் கொடுத்து வெளியேற்றிவிட்டு, அரை மணி நேரத்திற்குள் இடித்து அகற்றியது.

பெங்களூருவில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்கும் பணி தொடக்கம்

இந்தக் கட்டடத்தின் அருகிலிருந்த மற்றொரு சேமடைந்த கட்டடமும் முறையாக, நோட்டீஸ் வழங்கப்பட்டு இடிக்கப்பட்டது. கட்டடத்தில் குடியிருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக நேற்று இரவே வெளியேற்றப்பட்டனர்.

இதையும் படிங்க: பெங்களூருவில் தொடர்ந்து சரியும் கட்டடங்கள்; 10 நாள்களில் 3 விபத்து

Last Updated : Oct 13, 2021, 5:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details