தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - Manikandan

சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதிக்கான புனிதப் பயணத்தின்போது, பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விபரங்களை கேரளா அரசு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 28, 2022, 9:10 PM IST

Updated : Nov 28, 2022, 9:22 PM IST

உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் அறிந்துகொள்ள வேண்டிய விபரங்களை கேரளா அரசு இன்று (நவ.28) வெளியிட்டுள்ளது. அதில், 'இவ்வருடத்திற்கான (2022-23) மகர விளக்கு பூஜை திருவிழாவுக்காக வரும் டிச.30 ஆம் தேதி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். வருகிற 2023 ஆம் ஆண்டு, ஜன.20-ல் மகர விளக்கு காலமாகும். ஜன.14-ல் பிரசித்தி பெற்ற மகர விளக்கு தரிசனம் நடைபெறுகிறது. மகர விளக்கு திருவிழாவுக்கு பின்னர், ஜனவரி 20-ல் கோயில் நடை சாத்தப்படும்.

மெய்நிகர் வரிசை: சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆன்லைன் தரிசன முன்பதிவு வசதி செய்துள்ளது. அதன்படி, கோயிலுக்கு வரும் பக்தர்கள் மெய்நிகர் வரிசையில் பதிவு செய்யவேண்டியது கட்டாயம்' ஆகும். மேலும், இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:-

உடனடி முன்பதிவுக்கு:

1. திருவனந்தபுரம் - ஸ்ரீ கண்டேஸ்வரம் சிவன் கோயில்.

2. கொல்லம் - மகா கணபதி கோயில்.

3. பத்தினம்திட்டா - நிலக்கல் தர்ம சஸ்தா கோயில், பந்தளம் பம்பை-வலியானவட்டம்.

4. ஆலப்புழா - ரயில் நிலையம், செங்கனூர்.

5. கோட்டயம் - எருமேலி கோயில், ஏற்றுமானூர், மகாதேவர் கோயில் வைக்கம்.

6. எர்ணாகுளம் - பெரும்பாவூர், கீழில்லம்.

7. இடுக்கி - குமுளி.

பூஜை கட்டண விவரங்கள்:

நெய்யபிஷேகம் - 1 தேங்காய் (முத்திரை ஒன்றுக்கு) - ரூ. 10

அஷ்டாபிஷேகம் - ரூ. 6,000

கணபதி ஹோமம் - ரூ. 375

உஷ பூஜை - ரூ. 1,500

நித்ய பூஜை - ரூ. 4,000

பகவதி சேவை - ரூ. 2,500

களபாபிஷேகம் - ரூ. 38,400

படி பூஜை - ரூ. 1,37,900

துலாபாரம் - ரூ. 625

புஷ்பாபிஷேகம் - ரூ. 12,500

அப்பம் (1 பாக்கெட்) - ரூ. 45

அரவணை (1டின்) - ரூ. 100

விபூதி பிரசாதம் - ரூ. 30

வெள்ளை நிவேத்தியம் - ரூ. 25

சர்க்கரை பாயசம் - ரூ. 25

பஞ்சாமிர்தம் - ரூ. 125

அபிஷேக நெய் (100 மிலி) - ரூ. 100

நவக்கிரக பூஜை - ரூ. 450

ஒற்றைகிரக பூஜை - ரூ. 100

மாலை/வடி பூஜை - ரூ. 25

நெல்பறை - ரூ. 200

மஞ்சள் பறை - ரூ. 400

தங்க அங்கி சார்த்தி பூஜை - ரூ. 15,000

நீராஞ்சனம் - ரூ. 125

இருமுடிக் கட்டு நிறைத்தல் (பம்பை) - ரூ. 300.

சபரிமலை ஐயப்பன் கோயில்..

சபரிமலை பூஜை நேரம்:-

காலை

3 மணி - நடை திறப்பு, நிர்மால்யம், அபிஷேகம்

3.30 - கணபதி ஹோமம்

3.30 முதல் 11.30 வரை நெய்யபிஷேகம்

7.30 - உஷ பூஜை

11 முதல் 11.30 வரை அஷ்டாபிஷேகம்

12.30 - உச்சிகால பூஜை

1.00 - திருநடை அடைப்பு

மாலை

3.00 - திருநடை திறப்பு

6.30 - தீபாராதனை

7 முதல் 9.30 வரை புஷ்பாபிஷேகம்

9.30 முதல் இரவு பூஜை

11.00 - ஹரிவராசனம் பாடி நடை அடைப்பு

பிளாஸ்டிக் இல்லாத சபரிமலை:

1. சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு

முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது இருமுடிக்கட்டில் பிளாஸ்டிக் பொருட்களை (பாட்டில், கவர் போன்றவை) தவிர்க்க வேண்டும்.

2. பம்பையை அசுத்தமாக்க கூடாது

பம்பை நதியில் உடைகள் உள்பட பொருட்களை வீச வேண்டாம். புண்ணிய நதியான பம்பையை அசுத்தமாக்காமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பக்தரின் பொறுப்பாகும்.

3. குப்பைகளை வீசாதீர்கள்

குப்பைகளை குப்பைத் தொட்டிகளில் மட்டுமல்லாமல் வேறு எந்த இடத்திலும் வீசுவதை தவிர்க்க வேண்டும்.

4. பொது இடங்களில் மலஜலம் கழிக்க வேண்டாம்

பக்தர்கள் பொது இடங்களில் மலஜலம் கழிக்கக் கூடாது. மலஜலம் கழிப்பதற்கு கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். பம்பை, சன்னிதானம் மற்றும் மலை ஏறும் வழிகளை தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.

5. மது, போதைப் பொருள் இல்லாத புனித பயணம்

பக்தர்கள் மது உள்பட போதைப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பம்பை, சன்னிதானம், வனப்பாதை உள்பட இடங்களில் புகைபிடிக்கக்கூடாது. ஆயுதங்கள், பட்டாசுகள் உள்பட வெடிபொருட்களை கைவசம் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

6. தீ பற்ற வைக்கும்போது கவனம் தேவை

ஸ்டவ் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை சன்னிதானத்தில் பயன்படுத்த அனுமதி இல்லை. தீ பற்ற வைத்தால் தேவை முடிந்தவுடன் அதை அணைக்க வேண்டியது அவசியமாகும்.

7. காவல்துறையை அழைக்கலாம்

பாதுகாப்பு பரிசோதனைகள் உள்ள இடங்களில் பக்தர்கள் தாங்கள் சுயமாக பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டும். பக்தர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளுக்கு காவல்துறையை தொடர்பு கொள்ளலாம். சந்தேகத்திற்கிடமான வகையில் ஏதாவது தென்பட்டால் உடனடியாக காவல்துறையிடம் விவரம் தெரிவிக்க வேண்டும். யாராவது வழி தவறி சென்றால் காவல் புறக்காவல் நிலையத்தின் உதவியை நாட வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் சிறுமிகள் தங்களது கழுத்தில் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் கூடிய அடையாள அட்டையை அணிய வேண்டியது அவசியமாகும்.

8. நடமாடும் மருத்துவ மையங்கள்

ஆக்சிஜன் பார்லர்கள் மற்றும் மருத்துவ மையங்களின் சேவையை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பம்பையிலும், நிலக்கல் பகுதியிலும் அவசர சிகிச்சை வசதிகளுடன் கூடிய நடமாடும் மருத்துவ மையங்கள் பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உதவிகளுக்கான தொலைபேசி எண்கள்:

அவசர செயலாக்க மையம் - 04735 202166

பம்பை - 04735 203255

நிலக்கல் - 04735 205002

பத்தனம்திட்டா மாவட்ட பேரிடர் நிவாரண அமைப்பு - 0468 2322515

பம்பை காவல் நிலையம் - 04735 203412

நிலக்கல் காவல் நிலையம் - 04735 205207

சன்னிதானம் காவல் நிலையம் - 04735 202014

பத்தனம்திட்டா மகளிர் காவல் நிலையம் - 0468 2272100

பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் - 0468 2222636

அவசர மருத்துவ மைய கட்டுப்பாட்டு அறை - 04735 203232

நிலக்கல் அரசு மருத்துவமனை - 04735 205202

பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவமனை சபரிமலை வார்டு - 9188746248

சன்னிதானம் அரசு மருத்துவமனை - 04735 202101

சாலை பாதுகாப்பு மண்டல திட்டம் - 9400044991, 9562318181, 0468 2222426 (அலுவலகம்)

சன்னிதானம் தீயணைப்பு நிலையம் - 04735 202033

சன்னிதானம் வனத்துறை - 04735 202074

பக்தர்களுக்கான அறிவுரைகள்:

1. பக்தர்கள் மெதுவாக மலை ஏற வேண்டும்.

2. சன்னிதானம் செல்வதற்கு பாரம்பரிய பாதையான மரக்கூட்டம், சரங்குத்தி மற்றும் நடைப்பந்தலை பயன்படுத்த வேண்டும்.

3. பதினெட்டாம்படியில் ஏறுவதற்கு வரிசையில் செல்ல வேண்டும்.

4. வரிசையை தாண்டி செல்வதோ, வரிசையில் நிற்கும்போது நெரிசலை ஏற்படுத்தவோ கூடாது.

5. பதினெட்டாம் படியில் தேங்காய் உடைக்கவோ, முட்டு குத்தி ஏறவோ முயற்சிக்கக் கூடாது.

6. ஐயப்பனுக்கு கொடுக்கும் காணிக்கையை வீசி எறியாமல் உண்டியலில் மட்டும் போடவும்.

7. தரிசனம் முடிந்து திரும்பிச் செல்லும் பக்தர்கள் நடைப்பந்தல் மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும்.

8. பக்தர்கள் ஓய்வெடுக்கும் இடங்களான நடைப்பந்தலையும், கீழ் பகுதியில் உள்ள திருமுற்றத்தையும் நடைபாதையாக பயன்படுத்தக் கூடாது.

9. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு புறப்படுவதற்கு முன் கூட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

10. சன்னிதானத்தில் உள்ள திருமுற்றத்தில் ஓய்வெடுக்க வேண்டாம்.

11. டோலியில் செல்ல விரும்புபவர்கள் பம்பையிலுள்ள தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி அலுவலகத்தின் சேவையை பயன்படுத்திக் கொள்ளவும்.

12. இதற்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டாம்.

13. கோவில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

இதையும் படிங்க: விண்ணைப் பிளந்த சரணகோஷம்... திறக்கப்பட்டது சபரிமலை ஐயப்பன் கோயில்

Last Updated : Nov 28, 2022, 9:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details