மேஷம்: சூரியன் இன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார். தற்போது, உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளர விடாதீர்கள். இருப்பினும், பொருளாதார ரீதியாக பார்க்கும் போது இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானுக்கு தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள்.
ரிஷபம்: உங்கள் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இந்த ஒரு மாத காலத்திற்குள் உங்களின் பல பிரச்னைகள் தீரும். இச்சமயத்தில் நீங்கள் கொஞ்சம் திமிராகவும் இருக்கலாம். இத்தகைய சூழ்நிலையில் உங்கள் தொழில் பார்ட்னரிடமும், வாழ்க்கைத் துணையுடனும் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: காயத்ரி மந்திரத்தினை ஒரு ஜெபமாலை அளவு (108 முறை) உச்சரியுங்கள்.
மிதுனம்:ரிஷப ராசிக்குள் சூரியன் நுழைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு பல வேலைகள் சுலபமாக முடியும். பழைய வியாதிகள் நீங்கிவிடும். வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளை மேம்படுத்த வாய்ப்பு உண்டாகும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள்.
பரிகாரம்: சூரிய அஷ்டகத்தை பாராயணம் செய்யுங்கள்.
கடகம்:சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் வரை கடக ராசியினருக்கு சமூகத்தில் மிகுந்த மரியாதை கிடைக்கும். புதிய நபர்களுடன் நட்பு கொள்வீர்கள். தற்போது வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள். அரசுப் பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: சிவபெருமானை வழிபடவும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு ரிஷபத்தில் சூரியன் சஞ்சரிப்பது முதல் ஒரு மாத காலம்வரை தொழிலில் அதிக கவனம் இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இச்சமயத்தில் உங்கள் தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானின் ஏதாவதொரு மந்திரத்தை ஜபியுங்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ரிஷபத்தில் சூரியன் சஞ்சரிப்பது முதல் ஒரு மாத காலம்வரை தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். தேவையற்ற கவலைகள் உங்களைத் தொந்தரவு செய்யும். உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவில் இருந்த பகைமை நீங்கி இனிமையாக மாறும்.
பரிகாரம்: தினமும் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள்.
துலாம்:துலாம் ராசிக்காரர்கள் ரிஷபத்தில் சூரியன் சஞ்சரிப்பது முதல் ஒரு மாத காலம் வரை கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மாமனார் தரப்பிலிருந்தும் உங்களை கவலைப்படுத்தும் படியான நிகழ்வுகள் ஏற்படலாம். வாகனங்கள் போன்றவற்றை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்யுங்கள்.
விருச்சிகம்:ரிஷப ராசிக்குள் சூரியன் நுழைவது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சகஜமாக வாழ்க்கையையே கொடுக்கும். இருப்பினும், உங்கள் வாழ்க்கைத் துணையுடனும், தொழில் பார்ட்னருடனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ஈகோவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானுக்கு தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள்.
தனுசு:சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைவது தனுசு ராசியினருக்கு நன்மை தருவதாகவே அமைகிறது. உங்கள் எதிரிகள் பலவீனமாக இருப்பார்கள். இச்சமயத்தில் உங்களுக்கு இருந்து வந்த சில கடுமையான நோய்கள் உங்களை விட்டு விலகும். பணியிடத்தில் சக ஊழியரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தற்போது வங்கி கடனுக்கும் விண்ணப்பிக்கலாம்.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
மகரம்:சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைவது மகர ராசியினருக்கு நல்லதே. மாணவர்கள் எந்த பாடப்பிரிவில் சேரலாம் என்பது குறித்து தெளிவாக திட்டமிடுவார்கள். காதலிப்பவர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் திருப்தி அடைவார்கள். வருமானத்தை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்பீர்கள்.
பரிகாரம்:தினமும் தந்தையின் ஆசியைப் பெற்று பிறகு உங்கள் வேலையைத் தொடங்குங்கள்.
கும்பம்:கும்பம் ராசியினருக்கு ரிஷபத்தில் சூரியன் நுழைதல் முதல் இந்த ஒரு மாத காலமும் நிலம் மற்றும் சொத்து சார்ந்த வேலையில் கவனமாக இருக்க வேண்டும். தாயாரின் உடல் நலத்தில் உங்களின் அக்கறை கூடும். தொழிலில் புதிய பிராஜெக்ட் கிடைக்கப்பெருவீர்கள்.
பரிகாரம்: தினமும் காயத்ரி சாலீசாவை பாராயணம் செய்யுங்கள்.
மீனம்:ரிஷப ராசிக்குள் சூரியன் நுழைவதால் மீன ராசியினரின் பலம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். இளைய சகோதர, சகோதரிகளுடனான உங்கள் உறவு சுமூகமாக இருக்கும். நீங்கள் ஒரு ஆன்மீக யாத்திரை அல்லது மத யாத்திரை குறித்த பயணத்தை மேற்கொள்ளலாம்.
பரிகாரம்: தினமும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.