புதுச்சேரிமாநில போலீஸ் டிஜிபி ஆக மனோஜ்குமார் லால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம், போலீஸ் தலைமையகத்தில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார். நேற்று முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்து, ரங்கசாமியை சந்தித்து வாழ்த்துப்பெற்றார். இந்த நிலையில் போலீஸ் தலைமையகம் பின்புறம் செயல்பட்டு வரும், போலீஸ் கேண்டீனுக்கு, டிஜிபி மனோஜ்குமார் லால் திடீரென்று வந்தார்.
போலீஸ் கேண்டீனில் ஆய்வு செய்த டிஜிபி - டிஜிபி
புதுச்சேரி போலீஸ் கேண்டீனில், டிஜிபி திடீர் ஆய்வு செய்து சாப்பிட்டவர்களிடம் தரம் குறித்து கேட்டறிந்தார்.
போலீஸ் கேண்டீனில் ஆய்வு செய்த டிஜிபி
பின்பு அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம், உணவு தயாரிப்பது குறித்துக்கேட்டார். பின்பு அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்களிடம், உணவின்தரம் குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட்!