புதுச்சேரிஅருகேஉள்ள ஆட்டுப்பட்டி பகுதியில் நேற்று (மே22) இரவு பெண் ஒருவரின் தங்க செயினை ஒருவர் பறித்து கொண்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் விரட்டிச் சென்று பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பின்பு அப்பகுதியில் இருளாக இருந்ததால் அவன் தப்பித்து அருகே உள்ள பாலம் வேலை நடக்கும் பகுதிக்கு சென்று மறைந்துகொண்டான்.
அதற்குள் தகவல் கிடைத்து ஒதியன்சாலை போலீசார் விரைந்து வர பாலத்தின் அடியில் மறைந்திருந்த திருடனை இளைஞர்களே வெளியே தூக்கிக்கொண்டு வந்தனர். ஆனால், அவன் மயக்கத்தில் இருப்பது போல் நடித்தான். இதனால் வெளிச்சமான பகுதிக்கு அவனை இளைஞர்கள் தூக்கி வந்தனர்.பின்பு திருடன் முகத்தில் தண்ணீர் ஊற்றிய போது எழுந்தான்.