தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குடியரசுத் தலைவர் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி! - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

குடியரசுத் தலைவர் என்பவர் ஜனநாயக முறைப்படி செயல்படுபவராக இருக்க வேண்டுமே தவிர, ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

narayanasamy
narayanasamy

By

Published : Jul 3, 2022, 7:41 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அவரது இல்லத்திலிருந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நேற்றைய தினம் புதுச்சேரிக்கு வந்திருந்த குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் என்பவர் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்கக் கூடாது,

ஜனநாயக முறைப்படி செயல்படுபவராக இருக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கும் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார். அதைத் திரும்ப பெறுவதற்கும் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார். குடியரசுத் தலைவர் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும், இதுபோல இருக்கக் கூடாது.

ஜனநாயக முறைப்படி நடுநிலையாக செயல்படக்கூடிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா தான், எனவே அவர்தான் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் உள்ள மதச்சார்பற்ற அணி யஸ்வந்த் சின்காவை ஆதரிக்கும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி தோல்வி அடைந்துள்ளது. மாநிலங்களுக்கு கிடைக்கும் இழப்பீடு தொகையை மத்திய அரசு காலம் கடந்து வழங்கி வருகிறது. இதனால்தான் பல்வேறு மாநிலங்களில் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

காரைக்காலில் வயிற்றுப் போக்கு வாந்தியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டம் புதுச்சேரியில் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரைக்கால் மாவட்டம் மீது முதலமைச்சருக்கு அக்கறை இல்லை, காரைக்கால் புறக்கணிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது.

அமைச்சர்களிடம் ஒற்றுமை இல்லாததே காரைக்கால் பாதிக்கப்பட்டதற்குக் காரணம். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் மத்தியில் கரோனா 4ஆவது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை தனியார் கணினி நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் உடல் கருகி பரிதாப பலி!

ABOUT THE AUTHOR

...view details