தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ம.பி.யில் மூதாட்டியை இழுத்துச் சென்றார்களா காவல் துறையினர்?

மத்தியபிரதேசத்தில் மூதாட்டி ஒருவரை காவலர் ஒருவர் இழுத்துச் சென்ற வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ம.பி.யில் மூதாட்டியை இழுத்துச் சென்றார்களா காவல் துறையினர்?
ம.பி.யில் மூதாட்டியை இழுத்துச் சென்றார்களா காவல் துறையினர்?

By

Published : Jan 9, 2023, 1:48 PM IST

மொரேனா: மத்தியபிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், மாதா பசய்யா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது சகோதரர் சஹாப் சிங், தன்னுடன் பண தகராறில் ஈடுபட்டார் என அவரது சகோதரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதனை விசாரிப்பதற்காக காவல் துறையினர் கிராமத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது, ‘எங்கள் வீட்டுக்கு ஷைலு மற்றும் அசோக் குர்ஜார் ஆகிய இரண்டு காவலர்கள் வந்தனர். அவர்கள் என் தாயாரையும் எனது மனைவியையும், ஈடு இரக்கமில்லாமல் அடித்தனர். என் அம்மாவை இழுத்துச் சென்றனர். இதனால் எனது தாயார் மயக்கமடைந்தார்” என குற்றம் சாட்டப்பட்ட ஷாப் சிங் (புகாரில் தெரிவித்த தகவலின் அடிப்படையில்) தெரிவித்தார்.

அதேநேரம், ‘குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரிக்கச் சென்றபோது, அவரது தாயார் எங்களை கண்டித்தார். அப்போது அவரது மகன் சஹாப் சிங் தப்பி ஓடினார். இந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை தப்பி ஓடுவதற்கு அவரது தாயார் உதவினார்’ என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இது குறித்து முறையான விசாரணை நடத்தப்படும் என தலைமைக் காவல் கண்காணிப்பாளர் அதுல் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:திருவள்ளூரில் மாமியாரை கொன்ற மருமகன் போலீசில் சரண்

ABOUT THE AUTHOR

...view details