தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெடிகுண்டு வதந்தி - பரப்பியவர் கைது - Delhi news

டெல்லி: டெல்லி-பாட்னா விமானத்தில் பயணித்த 22 வயது நபர் டெல்லி விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி காவல் துறையினருக்கு ஏமாற்று அழைப்பு விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி-பாட்னா விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்று வதந்தி பரப்பிய நபர் கைது
டெல்லி-பாட்னா விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது என்று வதந்தி பரப்பிய நபர் கைது

By

Published : Jun 15, 2021, 12:50 AM IST

டெல்லி-பாட்னா விமானத்தில் இருந்த ஆகாஷ் தீப் (22) என்ற இளைஞன் நேற்று (ஜூன் 14) தனது தந்தையுடன் விமானத்தில் ஏறியுள்ளார். பின்னர், அந்த இளைஞர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பிசிஆருக்கு அழைப்பு விடுத்ததாக மூத்த காவல் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

முதல்கட்ட விசாரணையின்படி, அந்த நபர் "மனநலம் பாதிக்கப்பட்டவர்" என்றும், அவரது தந்தையுடன் பாட்னாவுக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், "அவரது மருத்துவ சிகிச்சையின் ஆவணங்களை நாங்கள் பெற்றுள்ளோம். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும்.

அவரது விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். விமானத்தில் 48க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அவர்கள் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு, விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details