தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 9, 2021, 5:07 PM IST

ETV Bharat / bharat

ஹைதராபாத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்குச் சீல்வைப்பு!

ஹைதராபாத்: குஷைகுடாவில் உள்ள பிரபல வணிக வளாகமான டி மார்ட்டில் தரமற்ற பொருள்கள் விநியோகிப்படுவதாகக் கூறி, அதனை நகராட்சி அலுவலகத்தினர் பூட்டி சீல்வைத்தனர்.

டி மார்ட்
டி மார்ட்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பல்வேறு பகுதிகளில் டி-மார்ட் வணிக வளாகங்கள் செயல்பட்டுவருகின்றன. அந்த வகையில் குஷைகுடா பகுதியிலும் டி-மார்ட் ஒன்று செயல்பட்டுவந்தது.

இங்கு பொதுமக்கள் நாள்தோறும் பொருள்கள் வாங்க வருவது வாடிக்கை. மளிகைப் பொருள்கள், ஆடைகள், வீட்டிற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் கிடைப்பதால் இங்கு மக்களின் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று குஷைகுடாவில் உள்ள டி மார்ட்டில் பத்மாரெட்டி என்பவர் லையன் டேட்ஸ் (Lion Dates) வாங்கியுள்ளார். ஒரு வாரம் கழித்து அதைச் சாப்பிட திறந்தபோது, அழுகிப்போன துர்நாற்றம் வீசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் பத்மா ரெட்டி, இது குறித்து குஷைகுடா நகராட்சி அலுவலர்களிடம் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து கப்ரா நகராட்சி அலுவலர் மைத்ரேய் காவல் துறையின் உதவியுடன் ஆய்வுசெய்தார்.

இதையடுத்து உடனடியாக அவர் டி-மார்ட்டை பூட்டி சீல்வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்ட கோரிய வழக்குத் தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details