தெலங்கானா: Lowest temperature: கடந்த செவ்வாய்க்கிழமை(டிச 21) அன்று, குமரம் பீம் மாவட்டம், கின்னெதரியில் கடந்த 125 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குறைவான வெப்பநிலையான 3.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
125ஆண்டுகளில் இரண்டாவது தடவை மிகக்குறைந்த வெப்பநிலை:
1897இல் இருந்து இதுவரை, டிசம்பர் 27,2017இல் அடிலாபாத்தில் பதிவான 3.5 டிகிரி செல்சியஸ், அதற்கு முன்பாக ஜனவரி 8,1946இல் ஹைதராபாத்தில் பதிவான 6.1 டிகிரி செல்சியஸ், அதற்கு முன்னதாக டிசம்பர் 17,1897இல் நிஜமாபாத்தில் பதிவான 4.4 டிகிரி செல்சியஸ் என பதிவான பதிவுகளே மிகக்குறைவான வெப்பநிலையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு, மிகக்குறைவான வெப்பநிலை அடிலாபாத் மாவட்டத்தில் 3இல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை சென்றுள்ளது. ரெங்காரெட்டி மாவட்டத்தில் 8.4 டிகிரி செல்சியஸ் மற்றும் ஹைதராபாத்தில் 9.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தெலங்கானா வானிலை மையம், அடிலாபாத் மாவட்டத்தில் வரும் நாட்களில் மிகக்குறைந்த வெப்பநிலைப் பதிவாக வாய்ப்புள்ளதால், அந்தப்பகுதிகளுக்கு ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.