தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்!

மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்

By

Published : Oct 31, 2021, 8:13 AM IST

Updated : Oct 31, 2021, 10:51 AM IST

பெங்களூரு: கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று முன் தினம் (அக்.29) இவர் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

புனித் ராஜ்குமார் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புனித் ராஜ்குமார்

மகளின் வருகைகாக காத்திருப்பு

முன்னதாக புனித் ராஜ்குமாரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள காண்டீவரா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, இவரது மகள் த்ரிதி (Dhriti) அமெரிக்காவிலிருந்து வருவதற்காக அவரது உடலை அடக்கம் செய்யாமல் பொது மக்கள் பார்வைக்காக வைத்திருந்தனர்.

புனித் ராஜ்குமார் மகள்

இதனைத் தொடர்ந்து அவரது மகள் பெங்களூரு வந்த பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். தொடர்ந்து நேற்று (அக்.30) அவரது மகள் பெங்களூரு வந்தடைந்தார்.

ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்

இதையடுத்து நேற்று மாலை அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. ஆனால் மாலை நேரத்தில் சாத்தியம் இல்லாத காரணத்தல் இன்று (அக்.31) நல்லடக்கம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

உடல் நல்லடக்கம்

உடல் நல்லடக்கம்

அந்த வகையில் இன்று (அக்.31) ஸ்ரீ கண்டீரவா ஸ்டுடியோவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில், புனித் ராஜ்குமாருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் புனித் குடும்பத்தினரிடம் தேசியக் கொடியை முதல்வர் பசவராஜ பொம்மை வழங்கினார்.

அரசு மரியாதை

அதனைத் தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது தாய், தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திலேயே, புனித்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகர்!

Last Updated : Oct 31, 2021, 10:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details