டெல்லி : காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அண்மையில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் வரலாற்றை திரித்து வன்முறை மற்றும் கோபத்தை தூண்டுகிறது எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “சில படங்கள் மாற்றத்தை தூண்டும். ஆனால், தி காஷ்மீர் ஃபைல்ஸ் (The Kashmir Files) வெறுப்பைத் தூண்டுகிறது. உண்மை நீதி, மறுவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உண்மைகளைத் திரிக்கிறது, வரலாற்றைத் திரித்து கோபத்தைத் தூண்டி வன்முறையை ஊக்குவிக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 11ஆம் தேதி வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்தப் படம் ஒருசாரருக்கு ஆதரவாக எடுக்கப்பட்டதாக எதிர்கருத்துகள் வெளியாகிவருகின்றன.