மேற்கு வங்கமாநிலத்தில் திகா எனும் நகரம் உள்ளது. இங்கு வழக்கமாக நடைபெறும் மீன் சந்தையில் ஷிபாஜி கபீர் என்பவர் ராட்ஷத பெண்'டெலியா போலா' மீனை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தார். அது ஏலம் விடப்பட்ட 3 மணி நேரத்துக்குப்பின், கிலோ 26 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் சுமார் 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த மீன் உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க உதவும் என்பதால் இது எப்போதும் நல்ல விலைக்கு போகும் என மீனவர்கள் கூறுகின்றனர். ’டெலியா போலா’ மீனை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று வாங்கியதாக வியாபாரி கார்த்திக் பெரா கூறினார். சில தினங்களுக்கு முன் கிடைத்த ஆண் டெலியா போலா மீன் 9 லட்சம் ரூபாய்க்கு விலை போனதாக குறிப்பிட்டார்.