துமாகூர் (கர்நாடகா):The Elephant Whisperers என்ற ஆவணப்படத்தில் இடம் பெற்றதன் மூலம், ஆஸ்கர் விருது பெற்ற நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி தம்பதி, சொந்த வீடு இல்லாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.
The Elephant Whisperers என்ற குறும்படம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து இருந்த நிலையில், இந்தப் படம், திரை உலகின் மிக உயரிய விருதான, ஆஸ்கர் விருதை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் வென்றது. இந்தப் படத்தில், தமிழ்நாட்டின் முதுமலை பகுதியைச் சேர்ந்த பொம்மன் - பெள்ளி நடித்திருந்ததன் மூலம், இந்தியா முழுவதும் ஒரே நாளில், இந்த தம்பதி, பிரபலம் ஆயினர். பழங்குடியினத்தைச் சேர்ந்த இந்த தம்பதியை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சோகம்: பொம்மன் - பெள்ளி தம்பதி, ஆஸ்கர் விருது வென்றதன் மூலம், அவர்கள் உலகப்புகழ் பெற்று உள்ள நிலையிலும், அவர்கள் தங்குவதற்கு என்று ஒரு வீடு இல்லை. எனவும், தங்களின் அவல நிலையைக் கேட்க யாரும் இங்கு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
இவர்களின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கர்நாடக மாநிலத்தின், தும்கூர் மாவட்டம் ஷிரா பகுதியில் உள்ள வர்தமான் பள்ளி நிர்வாகம் முன்வந்தது. சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுமை அம்சமாக, பொம்மன் - பெள்ளி தம்பதி உடன், மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது, பேசிய பொம்மன், தாங்கள் வீடு இன்றி கஷ்டப்படுவதாகவும், தங்களுக்கு வீடு கட்ட உதவுமாறும் வேண்டுகோள் வைத்தார்.