தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா 3 வது அலையில் இருந்து தப்பியதற்கு காரணம் என்ன? - தமிழிசை விளக்கம் - தேர்தல் செய்திகள்

அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கரோனா மூன்றாவது அலையில் இருந்து தப்பியுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமினைப் பார்வையிட்டார்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

By

Published : Oct 19, 2021, 9:29 PM IST

புதுச்சேரி:மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் குடும்பத்தின் நலன் கருதி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தொற்று பரவ நாம் காரணமாக இருக்கக்கூடாது.

சுமார் 7 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும்; 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் ஆக இதுவரை புதுச்சேரியில் 10 லட்சத்து 82 ஆயிரத்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

ஒருலட்சம் தடுப்பூசிகள்

சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுகிறார்கள். விடியற்காலை மற்றும் இரவு நேரத்தில் தடுப்பூசி போடுவது, வீட்டுக்கு சென்று தடுப்பூசி போடுவது என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். மேலும், ஒரே நாளில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளை கேட்டுள்ளேன்.

மேல்சாத்தமங்கலம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற

திருப்தியுடன் தீபாவளி

மீதமுள்ள இரண்டு லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்திவிட்டால் புதுச்சேரி 100% தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாறும்; இது பெருமைக்காக அல்ல. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக; எனவே மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தீபாவளிக்கு முன்பு தடுப்பூசி போட்டுக்கொண்டால் பயமில்லாமல் திருவிழாவைக் கொண்டாடலாம். கரோனா மூன்றாவது அலை வருவதிலிருந்து நாம் தப்பித்து இருக்கிறோம். அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டதே இதற்கு காரணம்.

உள்ளாட்சி தேர்தல் விவகாரம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் 21-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இட ஒதுக்கீடு அளித்து தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது வரவேற்க வேண்டியதே. உள்ளாட்சி தேர்தலை குறுகிய காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்ததால், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கான பட்டியல் தயார் செய்யப்படாத சூழ்நிலையில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

அவகாசம்

அரசு இதனை எடுத்துக் கூறி நீதிமன்றத்தில் அவகாசம் கேட்க இருக்கிறது. நீதிமன்றத்தில் அவகாசம் கிடைத்தால் மக்கள் நலப் பணிகள் செய்ய அரசு கோரிக்கை வைக்கலாம்.

தேர்தல் வழக்கு நகரும் திசையைப் பொறுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை நீக்க அனுமதி பெற வாய்ப்பிருக்கிறது. மேலும், அவை அனைத்தும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அமையும். முதலமைச்சர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆயுத பூஜை நாளன்று சந்திப்பின் போது இதைப் பற்றி குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ராகுல் காந்தி ஒரு போதை அடிமை" கர்நாடக பாஜக தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை

ABOUT THE AUTHOR

...view details