தெலங்கானா: தெலங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தைச் சேர்ந்த யாக்கய்யா என்ற விவசாயி, தனது எருமை மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். சாலையில் மாடுகளை ஓட்டிச் சென்றபோது, அவ்வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.
ஆட்சியரின் ஓட்டுநர் பலமுறை ஹார்ன் அடித்தும் யாக்கய்யா வழி விடவில்லை எனத் தெரிகிறது. அதோடு அவர் செல்போனில் பேசிக்கொண்டு கார் வருவதை கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர், யாக்கய்யா மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, அரசின் 'ஹரித்த ஹாரம்' திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகளை யாக்கய்யாவின் மாடுகள் மேய்ந்துவிட்டதாக கூறி அவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தை செலுத்தவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த விவசாயி அபராதம் செலுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து விவசாயி யாக்கய்யா மங்கப்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பெண் பயணி மீது சிறுநீர் கழித்த ஆண் பயணி.. பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம்!