இது தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கிராம மக்களுக்கான திட்டங்களை அரசு சரியாக செயல்படுத்த வேண்டும். புதுச்சேரி கிராம மக்களுக்கு கிராம பஞ்சாயத்து சட்டங்கள், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் அவசியம் குறித்தும் சரியான விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
'சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு' - கிரண்பேடி அறிவிப்பு - கிரண்பேடி அறிக்கை
புதுச்சேரி: புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கிரண்பேடி அறிவிப்பு
குறிப்பாக, சுய உதவிக் குழுவினர் செய்யும் பொருள்களை சந்தைப்படுத்த அரசு உதவ வேண்டும், புதுச்சேரியில் 116 கிலோ மீட்டர் வரையிலான கிராமப்புற சாலைகளை சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. முன்னதாக, புதுச்சேரி கிராமங்கள் அடங்கிய வரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.