லூதியானா(பஞ்சாப்):ஆத்மா பூங்கா பகுதியில் நேற்று(டிச.14) காலை 6:39 மணியளவில் சாலையில் நடந்துகொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பின் தொடர்ந்தார். பின்,அவர், திடீரென்று தன்னிடம் இருந்த கத்தியால் அப்பெண்மணியைத் தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார்.
இந்த திடீர் தாக்குதலால் அப்பெண்மணி பதற்றமடைந்து சாலையில் விழுந்தார். இருப்பினும் அந்த நபருடன் சண்டையிட்டு அவரின் கத்தியைப் பறிக்க முயற்சி செய்தார். இந்த மோதலில் அப்பெண்மணியின் கைகள் காயமடைந்தன. இந்த அனைத்துச் சம்பவங்களும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகின.