தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நக்சல் தலைவர் கே. மோகன் ராவ் உயிரிழப்பு: தண்டகாரண்யம் காட்டில் இறுதிச் சடங்கு! - நக்சல் தலைவர்

மல்கன்கிரி (ஒடிசா): நக்சல் தலைவர் கே. மோகன் ராவ், ஜுன் 12ஆம் தேதி உயிரிழந்தார்.

நக்சல் தலைவர் கே. மோகன் ராவ் உயிரிழப்பு: தண்டகாரண்யம் காட்டில் இறுதிச் சடங்கு!
நக்சல் தலைவர் கே. மோகன் ராவ் உயிரிழப்பு: தண்டகாரண்யம் காட்டில் இறுதிச் சடங்கு!

By

Published : Jun 14, 2021, 7:27 AM IST

தெலங்கானா மாநில சிபிஐ (மாவோயிஸ்ட்) குழு உறுப்பினரும், நக்சல் தலைவருமான கே. மோகன் ராவ் என்ற தாமு தாதா சனிக்கிழமை (ஜுன் 12) காலமானார். இவரது இறுதிச்சடங்குகள் சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள தண்டகாரண்யம் காட்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

36 ஆண்டுகள் மாவோயிச அமைப்பில் பணியாற்றிய அவர் பல்வேறு பதவிகள் வகித்து வந்தார்.

அண்மையில் மோகன் ராவ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தின் (பி.எல்.ஜி.ஏ) உறுப்பினர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ராவின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மாட்டோம் என நக்சல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details