தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரிஷாப் பண்ட் விபத்துக்கு இதுதான் காரணமா..? நெடுஞ்சாலைத்துறை விளக்கம்.. - ரிஷப் பந்த் டிஸ்சார்ஜ்

கிரிக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் விபத்துக்குள்ளான பகுதியில் கால்வாய் இருந்ததாகவும், அதுவே கார் விபத்து ஏற்பட முக்கிய காரணம் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிஷாப் பண்ட்
ரிஷாப் பண்ட்

By

Published : Jan 21, 2023, 10:56 PM IST

உத்ரகாண்ட்:டிசம்பர் 30ஆம் தேதி உத்ரகாண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்ன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. கார் அப்பளம் போல் நொருங்கி, தீக்கிரையான போதும் நல்வாய்ப்பாக ரிஷாப் பண்ட் உயிர் தப்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்கு பின் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து குணமாகி உள்ளார்.

அவரது கார் விபத்திற்கான காரணம் குறித்து உத்ரகாண்ட் நெடுஞ்சாலைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய இடத்தில், தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பகுதி வழியாக நீர்ப்பாசனத் துறையின் கால்வாய் செல்வதாகவும் அதுவே விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாப் பண்ட் கார் விபத்து நடந்த இடத்தில், விபத்துகள் நடப்பது புதிதல்ல என்றும் பலமுறை வாகன விபத்துகள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சாலை பகுதியில் அமைந்துள்ள கால்வாய் வாகன ஓட்டிகளின் பார்வைக்கு தென்படாததால் திடீர் விபத்துகள் நிகழ்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

கால்வாய்க்கு அருகே அதிக வேகத்தில் வரும் வாகனங்கள் கட்டாயம் விபத்திற்குள்ளாகும் என்றும், மாநில நீர்வளத்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் இடையே உள்ள பிரச்சினைகள் காரணமாக அந்த சாலைப்பகுதி மேம்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரிஷாப் பண்ட் விபத்தை தொடர்ந்து நீர்வளத்துறையும், நெடுஞ்சாலைத் துறையும் சாலையிலுள்ள கால்வாயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன. சாலையில் இருக்கும் இந்த கால்வாய் சுமார் 4.5 மீட்டர் தூரத்திற்கு வேறு திசையில் திருப்பி விடப்படுவதாகவும், கால்வாய் பாதுகாப்புக்காக நெடுஞ்சாலையை நோக்கி கட்டப்பட்ட பெரிய தூணும் அகற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தன்னைத் தானே சுட்டுக் கொண்ட நீதிபதி.. காரணம் இதுதான்.!

ABOUT THE AUTHOR

...view details