தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கலாம் புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்து சிறுவன் சாதனை - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் புகைப்படங்களை பார்த்து, 250க்கும் மேற்பட்ட பெயர்களை சரியாக கூறும் 3 வயது சிறுவன், அதிக ஞாபக சக்தி கொண்ட சிறுவன் என கலாம் புக் ஆஃப் ரெகார்டில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான்.

சிறுவன் சாதனை
சிறுவன் சாதனை

By

Published : Aug 1, 2021, 7:08 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டாலின் - லட்சுமி நாராயணி தம்பதி. இருவரும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகன் யாஸ்வின் (3). சிறுவன் யாஸ்வின் 2 வயது முதலே அதிக ஞாபக சக்தியுடன் விளங்கியுள்ளான்.

இதனையடுத்து அவனது பெற்றோர்கள், சிறுவனுக்கு பல்வேறு புகைப்படங்களை காண்பித்து அவனது ஞாபக சக்தியை பரிசோதித்துள்ளனர். புகைப்பட அட்டைகளை காண்பித்தால், அதனை அடையாளம் கண்டு சரியாக கூறும் திறன் படைத்துள்ளான் சிறுவன்.

குறிப்பாக எந்த நாட்டின் தேசிய கொடிகளை காண்பித்தாலும், அதன் தலைநகரம், தேசிய தலைவர்கள், விலங்குகள், பறவைகள், மலர்கள், மரங்கள் என 250க்கும் மேற்பட்ட பெயர்களை சரியாக தெரிவிக்கிறான். இதன் காரணமாக அதிகளவு ஞாபக சக்தி கொண்ட சிறுவன் என கலாம் புக் ஆப் ரெக்கார்டில் யாஸ்வின் பெயர் இடம் பிடித்துள்ளது.

3 வயதிலேயே சாதனை படைத்த சிறுவனால், அவனது பெற்றோர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சட்டப்பேரவை அலுவலகத்தில் தரையில் அமர்ந்தபடி பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details