ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தார்சார் மார்சார் ஏரி, பஹல்காம் மற்றும் ஸ்ரீநகர் இடையே அமைந்துள்ளது.
மலைகள் மீது ஏறிச் சென்றுதான் இதை அடைய முடியும். இந்த ஏரிக்கு இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் 11 சுற்றுலாப்பயணிகள் சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக கனமழையில் சிக்கிக் கொண்டனர். அப்போது மகேஷ் என்ற சுற்றுலாப்பயணி தார்சார் மார்சார் ஏரியில் தவறி விழுந்துள்ளார்.
அவரைக் காப்பாற்ற சுற்றுலா வடிகாட்டியான ஷகீல் அகமதுவும் தண்ணீரில் குதித்துள்ளார். இருவரும் மாயமாகிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புப் படையினர், 11 பேரை மீட்டனர். ஏரியில் மூழ்கிய இருவரைத் தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், சுற்றுலா வழிகாட்டியான ஷகீல் அகமது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாயமான மகேஷ் என்ற சுற்றுலாப் பயணியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சுற்றுலாப் பயணியை காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரையே தியாகம் செய்த சுற்றுலா வழிகாட்டி ஷகீல் அகமதுவை சுற்றுலாத்துறையினர் உள்ளிட்டப் பல்வேறு தரப்பினரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரை மணி நேரத்தில் 25 பேரை கடித்த தெருநாய் - அதிர்ச்சி சம்பவம்!