தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள்: வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மலர்வளையம் வைத்த பாஜக! - வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போராட்டம்

புதுச்சேரி: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மலர்வளையம் வைத்து பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மலர்வளையம் வைத்த பாஜக
வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மலர்வளையம் வைத்த பாஜக

By

Published : Nov 6, 2020, 5:40 PM IST

Updated : Nov 6, 2020, 6:10 PM IST

புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

அதில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக படித்த இளைஞர்களுக்கு வேலை ஏதும் வழங்கவில்லை, வேலை வாய்ப்பகத்தில் பதிந்த இளைஞர்களை காங்கிரஸ் அரசு காத்திருக்கும் சூழ்நிலையில் உருவாக்கியுள்ளது என குற்றஞ்சாட்டப்பட்டது.

முன்னதாக புதுச்சேரி மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் மகளிர் அரசு மருத்துவமனை அருகே புறப்பட்டு, நகரின் முக்கிய வீதி வழியாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தை காந்திநகர் வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே காவல் துறையினர் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர். இதனால் காவல் துறையினருக்கும் பாஜக கட்சியினருக்கும் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக

பின்னர் காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜகவினர் அங்கு கண்டன முழக்கம் எழுப்பினர். மேலும், மலர்வளையங்கள் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க: நடிகை குஷ்புவின் புகைப்படத்தை எரித்து விசிக ஆர்ப்பாட்டம்!

Last Updated : Nov 6, 2020, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details