மகாராஷ்ட்ரா: புனேவைச் சேர்ந்தவர் சாகர் ஜெய்ராம் தட்கிலே (28) எனும் ராணுவ வீரர். இவரது மனைவிக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் சாகரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது தனது முதல் கணவருக்குப் பிறந்த மகளை தன்னுடைய இரண்டாவது கணவரான சாகருக்கு அவர் திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
தனது தாயின் இச்செயலால் மனமுடைந்த 15 வயது மகள், கடந்த நவ.10ஆம் தேதி இது குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரளித்த சிறுமி காவல் துறையிடம், தனது தாயார் தன் வளர்ப்பு தந்தையுடன் தனக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதாகவும், அதில் தனக்கு விருப்பமில்லாதபோதும் தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது எதிர்ப்பையும் மீறி கடந்த நவ.6ஆம் தேதி அஹமெத்நகரிலுள்ள ஓர் கோயிலில் தன்னை தனது வளர்ப்பு தந்தை சாகருடன் திருமணம் செய்து வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி காவல் துறையிடம் கூறினார். திருமணமான பின் தன்னை தன் வளர்ப்பு தந்தையுடனே உடலுறவு வைத்துக்கொள்ளும் படியும் தனது தாய் தன்னை வற்புறுத்தியதாகக் குற்றம்சாட்டினார்.
இதனால் வேதனையடைந்து பள்ளியில் அழுததைக் கண்ட பள்ளி நண்பர் ஒருவர் தன்னை வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றார். இதையடுத்து, இவ்விவகாரம் குறித்து காவல் துறையினரால் வழக்கு பதியப்பட்டு பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சிறுமியின் தாயும், வளர்ப்பு தந்தையான ராணுவ வீரர் சாகர் ஜெய்ராம் தட்கிலேவும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி முதல்வர் கைது..!