ஆந்திரா:ஆந்திராவின் சத்யசாய் மாவட்டத்தில் தாடிமரி மண்டல் சில்லகொண்டய்யபள்ளி என்ற இடத்தில் நேற்று(ஜூன்30) ஆட்டோ மீது மின் கம்பி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். விவசாய பணிகளுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இவர்கள் அனைவரும் கூடம்பள்ளியில் இருந்து சில்லகொண்டய்யப்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சம்பவத்தின் போது ஆட்டோவில் டிரைவருடன் 13 பேர் இருந்துள்ளனர். அதில் டிரைவர் பொத்துலய்யா மற்றும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். மின் அழுத்த கம்பி விழுந்ததும் உடனே ஓட்டுனர் ஆட்டோவை ஓரமாக நிறுத்தியுள்ளார். இருப்பினும் ஆட்டோ தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. ஆட்டோ ரெக்சின் கவரால் மூடப்பட்டிருந்ததால் உடனடியாக தீ பரவியது.