டெல்லி:டெல்லியில் வரும் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாட்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒரு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில், "ஜி20 உச்சி மாநாடு நடந்த பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு நிலைகளில் சில நாட்டின் அதிபர்கள், பிரதமர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாது என்ற முடிவினை எடுத்திருக்கிறார்கள். இருந்தபோதிலும், அந்த நாட்டின் பிரதிநிதிகள் மூலமாக அந்நாட்டின் நிலைப்பாடு மாநாட்டில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
கரோனா, உக்ரைன் போர், காலநிலை மாற்றம், கடன், வடக்கு-தெற்குப் பிளவு மற்றும் கிழக்கு-மேற்கு துருவமுனைப்பு போன்ற கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து நாட்டு தலைவர்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்தியா மிகவும் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடும் என்ற நற்பெயரைக் கொண்டுள்ளது; நிறைய நல்ல எண்ணங்களைக் கொண்டுள்ளது. ஆகையால், அனைவரும் மிகுந்த தீவிரத்துடன் இந்த மாநாட்டிற்கு வருகிறார்கள்” என்றார்.
தொடர்ந்து அவரிடம், ஜி20 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி புட்டினும், அதிபர் ஜியும் கலந்து கொள்ளாதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என கேள்வி கேட்கப்பட்டது. “இதனால், இந்தியாவிற்கு எந்த தாக்கமும் ஏற்படாது. அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நான் நினைக்கிறேன், ”என ஜெய்சங்கர் பதிலளித்தார். மேலும், “இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் கலந்துகொள்கிறார். உலக வங்கியை சீரமைப்பதில் அதிபர் பைடன் ஒருமித்த கவனம் செலுத்துவார். மின்னிலக்கமய பிரச்னைகள், உணவுப் பாதுகாப்பு ஆகியவை பற்றி விவாதிக்கலாம் என்று ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா கூறியுள்ளார்.
மின்னிலக்க நாணயச் சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஓர் உலகளாவிய ஏற்பாட்டு முறை பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெறும் 18 ஆவது ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் லீ கியாங் கலந்து கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை (செ.4) அறிவித்தார். மேலும், ஜனாதிபதி புடின் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இயலாததை தெரிவித்தார். அதற்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் புடின் தெரிவித்திருக்கிறார்” என்றார்.