தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

15 ராணுவ வீரர்கள் காணவில்லை! - Sukma

the-15-soldiers-involved-in-the-sukma-encounter-are-missing
the-15-soldiers-involved-in-the-sukma-encounter-are-missing

By

Published : Apr 4, 2021, 8:43 AM IST

Updated : Apr 4, 2021, 10:20 AM IST

08:39 April 04

சத்தீஸ்கர்: சுக்மா என்கவுன்டரில் ஈடுபட்ட 15 ராணுவ வீரர்கள் காணவில்லை என்று அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள சில்கர் வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. 

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரா்கள் ஐந்து போ் உயிரிழந்தனா். அத்துடன் 30 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த ஐந்து வீரர்களில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு, மீதமுள்ளவர்களின் உடல்கள் தேடப்பட்டுவருகின்றன. 

இந்த நிலையில், நேற்று என்கவுன்டரில் ஈடுபட்ட வீரர்கள் 15 பேரைக் காணவில்லை என்று அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால், கூடுதல் பாதுகாப்புப் படை வீரா்கள் சில்கர் வனப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் என்கவுன்டர்: பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு!

Last Updated : Apr 4, 2021, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details