தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தஞ்சாவூர் தேர் விபத்து- பிரதமர் மோடி இரங்கல் - தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோயிலில்

தஞ்சாவூர், களிமேடு அப்பர் கோயில் தேர் மீது மின்சார கம்பி உரசிய விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தேர் விபத்து- பிரதமர் மோடி இரங்கல்; ரூ 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
தஞ்சாவூர் தேர் விபத்து- பிரதமர் மோடி இரங்கல்; ரூ 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

By

Published : Apr 27, 2022, 10:14 AM IST

Updated : Apr 27, 2022, 10:59 AM IST

டெல்லி:தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் கோயிலில் இன்று அதிகாலை நடந்த சித்திரை தேரோட்ட விழாவில் தேர் உயர் அழுத்த மின் கம்பி மீது மோதியது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடி நிவாரணம்:இதுதொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், காயம் அடைந்தோர் விரைவில் குணமடைவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ 50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேர் விபத்து: தஞ்சாவூர் விரைகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

Last Updated : Apr 27, 2022, 10:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details