தானே: மகாராஷ்டிர மாநிலம், தானே அருகே உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில், நபர் ஒருவர் தனது மனைவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதில், அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பிய அந்த நபர், தண்டவாளத்திற்கு அருகே அழைத்துச்சென்று ரயில் முன்பு தள்ளிவிட்டார். பிறகு தனது இரண்டு குழந்தைகளையும், கைப்பையையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.