தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராணுவத் தளபதி பிபின் ராவத் மறைவு: தமிழிசை இரங்கல் - thamizisai soundarraajan paid condelence

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவத் தளபதி பிபின் ராவத்திற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராணுவத் தளபதி பிபின் ராவத் மறைவு : தமிழிசை இரங்கல்
ராணுவத் தளபதி பிபின் ராவத் மறைவு : தமிழிசை இரங்கல்

By

Published : Dec 8, 2021, 10:07 PM IST

புதுச்சேரி:முப்படைத்தலைமைத் தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், 'இந்திய நாட்டின் முதல் முப்படைத் தளபதி என்ற பெருமைக்குரிய பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயரதிகாரிகளுடன் பயணம் மேற்கொள்கையில் துரதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

பல தலைமுறையாய் ராணுவத்திற்கு சேவை செய்த குடும்பம்:

பிபின் ராவத் பல தலைமுறைகளாக இந்திய ராணுவத்தில் சேவையாற்றிய குடும்பத்தைச் சேர்ந்தவர். முப்படைகளின் சீர்திருத்தம் குறித்த ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்டவர். ராணுவத்தை நவீனமயமாக்கியதில் பெரும் பங்காற்றியவர்.
அவரது மறைவு இந்திய நாட்டுக்கும் ராணுவத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ராணுவத்தை நவீனமாக்கியதில் முக்கியப்பங்கு வகித்தவர்:

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அவரது மறைவு இந்திய நாட்டுக்கும் ராணுவத்திற்கும் பேரிழப்பாகும்' இவ்வாறு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாகிஸ்தானில் 4 பெண்களின் ஆடைகளை அவிழ்த்து அராஜகம்

ABOUT THE AUTHOR

...view details