தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை.. பின்னணி என்ன? - India Thailand visa policy change

Thailand scraps visa requirements for Indian tourists: தாய்லாந்து நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை.. பின்னணி என்ன?
Thailand scraps visa requirements for Indian tourists

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 4:07 PM IST

தாய்லாந்து: சுற்றுலா பயணம் செய்யும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என தாய்லாந்து அரசு இன்று (அக்.31) அறிவித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் முக்கிய வருமானமாக சுற்றுலாத் துறை இருந்து வருகிறது. இதனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

மேலும் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை தாய்லாந்து நாட்டிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாய்லாந்து நாட்டிற்கு 25.67 பில்லியன் டாலர் வருமானம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டிற்கு அதிக அளவு பயணம் மேற்கொள்ளும் வெளி நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் மலேசியா அதற்கு அடுத்தப்படியா சீனா தென்கொரியா மற்றும் இந்தியா உள்ளது. 2023ஆம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த 12 லட்சம் சுற்றுலா பயணிகள் தாய்லாந்து சுற்றுலா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவை இல்லை!

இதனையடுத்து தற்போது இந்தியாவிலுள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தாய்லாந்து அரசு இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பினை இன்று (அக்.31) வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்தியாவின் சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்து நாட்டில் தங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 2023 நவம்பர் மாதம் தொடங்கி 2024 மே மாதம் வரை அமலில் இருக்கும் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்து நாட்டில் தங்கிக் கொள்ளுவதற்கான அனுமதியை இந்தியா மற்றம் தைவான் ஆகிய இரு நாடுகளுக்கு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக சீனாவை சேர்ந்தவர் விசா இல்லாமல் தாய்லாந்து நாட்டிற்கு வருவதற்கான உத்தரவை அந்நாட்டு அரசு வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இந்தியர்கள் இலங்கை செல்வதற்கான விசாவை அந்நாட்டு அரசு ரத்து செய்து இருந்தது தற்போது அதை தொடர்ந்து தாய்லாந்து நாட்டிற்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்கும் ஆட்டோ ஓட்டுநர்.. ஐஐடி, ஐஐஎம் மாணவர்களுக்கு பாடம் எடுக்க அழைப்பு.. யார் இந்த அண்ணாதுரை!

ABOUT THE AUTHOR

...view details