தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘தேன்’ திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசின் விருது - கணேஷ் விநாயகன்

கணேஷ் விநாயகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் சங்கரதாஸ் சுவாமிகள் விருதை முதலமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.

thaen-movie
thaen-movie

By

Published : Sep 12, 2021, 7:25 PM IST

புதுவை அரசின் சிறந்த திரைப்படமாக ‘தேன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 24ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி விருது வழங்குகிறார்

புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டு சிறந்த படத்திற்கான விருது இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கிய தேன் என்ற தமிழ் திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக தருண் குமார், நாயகியாக அபர்நதி ஆகியோர் நடித்திருந்தனர்.

‘தேன்’ திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசின் விருது
புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் மத்திய அரசு திரைப்பட விழா இயக்குனரகம் இணைந்து இந்திய பனோரமா திரைப்பட விழாவை புதுச்சேரியில் ஆண்டுதோறும் நடத்துகின்றன. இந்த ஆண்டுக்கான திரைப்பட விழா வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது. தேன் திரைப்படத்தை இயக்கிய கணேஷ் விநாயகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் சங்கரதாஸ் சுவாமிகள் விருதை முதலமைச்சர் ரங்கசாமி வழங்குகிறார்.

ABOUT THE AUTHOR

...view details