பெங்களூரு: பாஜக ஆளும் மாநிலங்களில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் சில தகவல்களை பாஜக அரசியல் தலைவர்கள் தங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சர்ச்சை கிளம்பியது.
அதன்படி, கர்நாடக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பியின் உரை 10ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது, 12ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியான பசவண்ணா குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன.
இது ஒரு ஆபத்தான போக்கு என்று கல்வியியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். கர்நாடக அரசு பள்ளிப் பாடப்புத்தகங்களை காவி நிறமாக்குவதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாட புத்தகங்களை ஆய்வு செய்யவும், அவற்றைத் திருத்தவும் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.