ஜம்மூ & காஷ்மீர்:பயங்கரவாதிகளிடமிருந்து பத்திரிகையாளர்களுக்கு இணையம் வழியாக அச்சுறுத்தல் வந்த நிலையில், இன்று(நவ.24) காஷ்மீரிலுள்ள மூன்று மாவட்டங்களில் காவல்துறை சோதனை நடத்தியது. இதுகுறித்து ஸ்ரீநகர் காவல்துறையினர், “ஸ்ரீநகர், பட்கம், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் ; காவல்துறை சோதனை
ஜம்மு & காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்த நிலையில், பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் ; பல்வேறு இடங்களில் காவல்துறை சோதனை
’காஷ்மீர் ஃபைட்ஸ்’ என்னும் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் இணையதளத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக செயல்படும் பத்திரிகையாளர் சில பேரின் பட்டியலை வெளியிட்டதையடுத்து இந்த சோதனை நடவடிக்கைகள் நடந்தேறியுள்ளது. இதனால் அச்சத்திற்குள்ளான ஐந்து பத்திரிகையாளர்கள், தற்போது பணி விலகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மங்களூரு குண்டு வெடிப்பு: ஐஆர்சி அமைப்பு பொறுப்பேற்பு