ஜம்மு-காஷ்மீர்:ஜம்மு காஷ்மீர் யூனியன் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ஷாகுந்த் மற்றும் அனந்த்நாத் மாவட்டத்தில் உள்ள காகுந்த் வெரிநாக் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர், காவலர்கள் சம்பவ பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர், காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.