ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகே உள்ள நூர்கோட் (Noorkote) கிராமத்தில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதலின்போது, பயங்கரவாதிகளின் மறைவிடத்தைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.
பயங்கரவாதிகள் மறைவிடத்தை சுற்றிவளைத்த ராணுவம்: ஆயுதங்கள் பறிமுதல் - பயங்கரவாதிகள் மறைவிடத்தை சுற்றிவளைத்த ராணுவம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தைக் கண்டுபிடித்த பாதுகாப்புப் படையினர், அங்கிருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டப் பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

பயங்கரவாதிகளின் மறைவிடத்தைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர், அங்கிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றினர். இரண்டு ஏகே47 (AK-47) துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள், ஒரு 223 போர் ஏகே வடிவ துப்பாக்கி மற்றும் குண்டுகள், ஒரு சீனத் துப்பாக்கி மற்றும் அதன் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் பொருளாதாரத்தை மத்திய அரசு வலுவிழக்க செய்கிறது - மெகபூபா முப்தி