தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைந்துள்ளது. தகவலின் பேரில், பயங்கரவாதிகள் மறைவிடத்தில் பாதுகாப்பு படையினரும், காவல் துறையினரும் இணைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆயுதங்கள், வெடி பொருள்கள் மீட்கப்பட்டன
காஷ்மீர் பயங்கரவாதிகள் மறைவிடத்தில் ஆய்வு: ஆயுதங்கள் மீட்பு! - காவல் துறையினர்
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தில் பாதுகாப்பு படையினரும், காவல் துறையினரும் இணைந்து நடந்திய சோதனையில் ஆயுதங்கள், வெடி பொருள்கள் மீட்கப்பட்டன
Terrorist hideout busted in Kashmir, weapons recovered
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “கிருஷ்ணா தாபா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரை கைது செய்த பின்னர், காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் அனந்த்நாக் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில், மூன்று ஏ.கே 56 துப்பாக்கிகள், இரண்டு சீன துப்பாக்கிகள், இரண்டு கையெறி குண்டுகள், பிஸ்டல், வெடி மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க...பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர்!