தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’மனிதத்தின் மாபெரும் அச்சுறுத்தல் தான் பயங்கரவாதம்...!’ - ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் - ஒன்றிய அமைச்சர் ஜெய் சங்கர்

மனிதத்தின் மாபெரும் அச்சுறுத்தல் தான் பயங்கரவாதம் என ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

’மனிதத்தின் மாபெரும் அச்சுறுத்தல் தான் பயங்கரவாதம்...!’ - ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்
’மனிதத்தின் மாபெரும் அச்சுறுத்தல் தான் பயங்கரவாதம்...!’ - ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர்

By

Published : Oct 29, 2022, 1:35 PM IST

புது டெல்லி:டெல்லியில் நடந்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு கமிட்டியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஐக்கிய நாடுகளின் முயற்சிகளையும் தாண்டி பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற கண்டங்களில் வளர்ந்து, விரிந்த வண்ணம் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு முக்கிய கட்டமைப்பை ஐக்கிய நாடுகள் அமைத்துள்ளது. 1267 அனுமதிகள் கமிட்டியின் தகவல்படி ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பயங்கரவாதம் வளர்ந்து விரிந்துகொண்டு தான் இருக்கிறது. இணையதளம், சமூக ஊடகம் போன்ற தளங்கள் பயங்கரவாத சக்திகளால் வலிமைமிகு ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகிறது.

சில ஆண்டுகளாக பயங்கரவாத கும்பல், அவர்களின் சித்தாந்தத்துடன் உடன் பயணிப்போர், அவர்களுக்கு உதவி செய்வோர் எல்லாம் தங்களின் ஆற்றலை புதிய தொழில்நுட்பம் மூலமாக வளர்த்து வருகின்றனர். அவர்கள் தொழில்நுட்பம், பணத்தை வைத்து மற்றும் சமூகத்தின் நெறிமுறைகள் ஆகியவற்றை வைத்து சுதந்திரத்தை தாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே 2ஆவது மிகப்பெரியது - பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details