அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர், அசாமில் பிரிவினை சக்திகள் ஆயுதங்களை தூக்கி வீசிவிட்டு அமைதியின் பாதையை கடந்த ஐந்தாண்டுகளில் தேர்வு செய்துள்ளனர்.
இந்த முன்னேற்றம் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அசாம் தற்போது வளர்ச்சியின் பாதையில் செல்கிறது. வங்கதேசத்துடன் எல்லைப் பிரச்னை நீட்டித்துவந்த நிலையில் வேலிகள் முறையாக அமைக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.