குண்டூர் (ஆந்திர பிரதேசம்): சிற்பி கட்டூரி வெங்கடேஸ்வர ராவ் 75ஆயிரம் இரும்பு போல்டுகளைக் கொண்ட காந்தி சிலையை நிறுவியுள்ளார்.
75ஆயிரம் இரும்பு போல்டுகளைக் கொண்டு காந்தி சிலை - சிற்பி அசத்தல் - 75ஆயிரம் இரும்பு போல்டுகள்
சிற்பி கட்டூரி வெங்கடேஸ்வர ராவ் தனது பணிகளை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்காக, 75ஆயிரம் இரும்பு போல்டுகளைக் கொண்டு மகாத்மா காந்தியின் உருவத்தை சிலையாக வடித்துள்ளார்.
Gandhi statue
இதனை வடிவமைத்த சிற்பி கட்டூரி வெங்கடேஸ்வர ராவ், தனது பணிகளை சர்வதேச அளவில் அங்கீகரிப்பதற்காகவும், அவர் பிறந்த தெனாலி நகரத்தை பிரபலமாக்குவதற்காகவும், கின்னஸ், லிம்கா சாதனைப் புத்தகங்களை அணுக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலையையும் இவர் 2018ஆம் ஆண்டு வடித்துக் கொடுத்திருக்கிறார். இதுவரையில், உலக தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் என 500க்கும் மேற்பட்ட சிலைகளை சிற்பி கட்டூரி வெங்கடேஸ்வர ராவ் வடித்து அசத்தியுள்ளார்.