கூச் பெஹார்: மேற்கு வங்கத்தில் உள்ள பிரபலமான ஜல்பேஷ் சிவன் கோயிலுக்கு கூச் பெஹாரில் உள்ள ஷிடலகுச்சியில் இருந்து சுமார் 30 யாத்ரீகர்கள் குழு காரில் சென்றனர். சங்ரா பந்தாவில் உள்ள தார்லா நதிப் பாலத்தின் அருகே யாத்ரீகர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அவர்கள் சென்ற வாகனம் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் 10 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மின் கம்பியில் மின் கசிவு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.