தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உபியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 10 பேர் உயிரிழப்பு - டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் பத்து பேர் இறப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Etv Bharat உபி-யில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து
Etv Bharat உபி-யில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து

By

Published : Sep 26, 2022, 8:50 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இட்டன்ஜா என்னும் பகுதியில் டிராக்டர் மீது லாரி மோதியதில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து லக்னோ போலீசார் தரப்பில்,நவராத்திரியை முன்னிட்டு இட்டான்ஜாவில் உள்ள தேவி கோயிலில் திருவிழா நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள சீதாபூரைச் சேர்ந்தவர் 46 பேர் டிராக்டரில் இட்டான்ஜா நோக்கி புறப்பட்டனர். அந்த டிராக்டர் காலை 10 மணியளவில், கடிபூர்வா அருகே சென்றுகொண்டிருந்த போது லாரி மோதி விபத்துள்ளானது.

அதனால் அருகே இருந்த குளத்திற்குள் கவிழ்ந்தது. அப்போது 10 பேர் சம்வயிடத்தில் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் மாநில அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெரிவித்தார்.

உபியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து

இதையும் படிங்க:அனுமதியின்றி செல்போனை பயன்படுத்தியதை தட்டி கேட்டததால் தாக்குதல் ; பரிதாபமாக உயிரிழந்த பட்டதாரி

ABOUT THE AUTHOR

...view details