தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஹிமாச்சல் பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல் - death

ஹிமாச்சல் பிரதேசத்தில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்
ஹிமாச்சல் பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்

By

Published : Sep 27, 2022, 9:30 AM IST

குலு:குலு மாவட்டம் ஜலோரியிலிருந்து சுற்றுலா செல்வதற்காக 17 பேர் வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது வாகனம் பஞ்சார் அருகே சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்,வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்,மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அம்மாநில அமைச்சர் கோவிந்த் தாக்கூர் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

இந்து விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், “இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும்,காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன”, என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் வன்புணர்வு

ABOUT THE AUTHOR

...view details