டெல்லி:கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனிடையே கரோனா தொற்று உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது.
இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. அதன்படி டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிாரா மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகின்றன.
அந்த வகையில், டெல்லியில் கோயில்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு வருகையில் கோயில்கள் மூடப்பட்டுள்ளதால், பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 923 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி